டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை


டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை
x

டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் 3-வது நாளாக சோதனை நடைபெற்றது.

புதுடெல்லி,

குஜராத் இனக்கலவரங்களில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக காட்டும் 2 ஆவணப்படங்களை லண்டன் பி.பி.சி. நிறுவனம் எடுத்து வெளியிட்டது. இதை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இது பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்த நிலையில் டெல்லி, மும்பையில் பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது.

குறிப்பிட்ட ஊழியர்களின் நிதித்தரவுகளையும், பி.பி.சி. பற்றிய மின்னணு மற்றும் காகித தரவுகளின் நகல்களையும் அதிகாரிகள் சேகரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிறுவனம் மீதான சர்வதேச வரி விதிப்பு, பி.பி.சி. துணை நிறுவனங்களின் பரிமாற்ற கட்டணம் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறையினர் விசாரிப்பதாக தெரிய வந்துள்ளது. பி.பி.சி. நிறுவன அலுவலகங்கள் நடத்தும் சோதனை மேலும் நீடிக்கும் என்று நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியது நினைவுகூரத்தக்கது.


Next Story