காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கோவா வருகை
இந்த பயணத்தில் எந்தவித அரசியல் நிகழ்வுகளும் இல்லை என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
பனாஜி,
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனிப்பட்ட பயணமாக கோவா வந்தார். கோவா தபோலிம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் 2.40 மணிக்கு வந்திறங்கிய அவர், பின்னர் அங்கிருந்து தெற்கு கோவாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றுக்கு சென்றார்.
இது அவரது தனிப்பட்ட பயணம் எனவும், இந்த பயணத்தின்போது எந்தவித அரசியல் நிகழ்வுகளும் இல்லை என்றும் கோவா துணை போலீஸ் சூப்பிரண்டு சலிம் ஷேக் தெரிவித்தார். கோவாவில் சோனியா தங்கியிருக்கும்போது கட்சி தலைவர்களுடனான சந்திப்போ, கூட்டங்களோ இல்லை என உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவரும் கூறினார்.
Related Tags :
Next Story