ராஜஸ்தான்: திருமண விழாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை


ராஜஸ்தான்: திருமண விழாவில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
x

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அடையாளம் தெரியாத குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த திருமண விழாவிற்கு குடும்பத்தினருடன் வந்திருந்த 6 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். விழா முடிந்து அனைவரும் வீடு திரும்பிய பின்னர் சிறுமியின் ஆடைகளில் இருந்த ரத்தக் கறைகளை அவரது பெற்றோர் கவனித்தனர். இதுபற்றி சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது சிறுமிக்கு நடந்த கொடூரம் தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தவுசாவில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவரை கண்டறிந்து கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story