ஜம்முவில் துப்பாக்கி தானாக வெடித்ததில் ராணுவ வீரர் பலி


ஜம்முவில் துப்பாக்கி தானாக வெடித்ததில் ராணுவ வீரர் பலி
x

கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் துப்பாக்கி தானாக வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா ஹத்தி செக்டாரில் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர் நாயக் ஜஸ்பிர் சிங். இவர் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கையில் இருந்த துப்பாக்கி வெடித்து தோட்டா அவரது உடலை துளைத்தது.

இதையடுத்து அருகில் இருந்த மற்ற வீரர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

1 More update

Next Story