வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா திடீர் டெல்லி பயணம்


வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா திடீர் டெல்லி பயணம்
x

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா திடீரென டெல்லி சென்று, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

பெங்களூரு:

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா திடீரென டெல்லி சென்று, பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கை நேரில் சந்தித்து பேசினார்.

டெல்லி சென்றாா்

வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேரப்போவதாக தகவல் வெளியானது. அடுத்தடுத்து அவர் கூறிய கருத்துகளும் அதை உறுதி செய்வதாக இருந்தன. இந்த நிலையில் டி.கே.சிவக்குமாருடன் சோமண்ணா இருக்கும் புகைப்படம் ஒன்று வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த சோமண்ணா, தான் பா.ஜனதாவை விட்டு விலக போவது இல்லை என்று கூறினார். தனக்கு கட்சியில் ஏற்பட்ட அவமதிப்பு குறித்து அவர் கண்ணீர் விட்டார்.

இந்த நிலையில் மந்திரி சோமண்ணா நேற்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச முடிவு செய்து இருந்தார். அமித்ஷா டெல்லியில் உள்ள வீட்டில் இல்லாததால் மாலை வரை அவரை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரை சோமண்ணா நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், தனது மகனுக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

கண்டுகொள்ளவில்லை

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், 'எடியூரப்பாவுடன் எனக்கு தற்போது தொடர்பு இல்லை. கட்சி கூட்டத்தில் அவரை பார்த்து பலமுறை வணக்கம் சொன்னேன். அவர் என்னை கண்டுகொள்ளவில்லை. இன்னொருவர் (விஜயேந்திரா) இருக்கிறார். அவருக்கும், எனக்கும் என்ன சம்பந்தம். நான் அரசியலில் மூத்தவன்' என்றார்.


Next Story