சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன - அகிலேஷ் யாதவ்


சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன - அகிலேஷ் யாதவ்
x

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ,

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தனித்து பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், அவை பொய்யாகிப்போனது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் 53 எம்.பிக்கள் ஆதரவுடன் பா.ஜ.க. புதிய ஆட்சியை அமைத்துள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க. பெரிதும் எதிர்பார்த்த உத்தரபிரதேச மாநிலம், அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது. அத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அதிக ஆதரவை அளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அகிலேஷ் யாதவ், இன்று இரண்டு வரைபடங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு வரைபடம் 2019 மக்களவைத் தேர்தல் முடிவையும், மற்றொன்று தற்போதைய தேர்தல் முடிவையும் காட்டுகிறது. அவர் வெளியிட்டுள்ள பதிவில்," சில தேர்தல்கள் வரைபடத்தை மாற்றுகின்றன. மேலும் அவர் பகிரப்பட்ட வரைபடத்தின்படி, 2019-ல் பா.ஜ.க.வுக்கு 62 இடங்களும், சமாஜ்வாதிக்கு 5 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் கிடைத்தன. ஆனால், இப்போது வரைபடம் மாறிவிட்டது. 2024-ல் பா.ஜ.க.வுக்கு 33 இடங்களும், சமாஜ்வாதி கட்சிக்கு 37 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும் கிடைத்தன. அதே சமயம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு இம்முறை ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.


Next Story
  • chat