இந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - பிரதமர் மோடி


இந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - பிரதமர் மோடி
x

2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

அசம்கர்,

உத்தரப்பிரதேசத்தில் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் பின்தங்கிய பகுதியாக சொல்லப்பட்ட அசம்கர், தற்போது, நாட்டின் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருப்பதாக கூறினார். 2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அசம்கரின் இந்த வளர்ச்சி, இந்தியா கூட்டணிக்கு தூக்கத்தை கொடுக்கிறது என விமர்சித்தார்.மேலும், இந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர், தேர்தலுக்கு முன் பல திட்டங்களை தொடங்கி வைப்பது, அரசியலுக்காக என்று, தன்னை விமர்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

நாட்டின் 140 கோடி மக்கள், மோடியின் குடும்பம் என்பதை, குடும்ப கட்சி வைத்திருப்பவர்கள் மறந்துவிட்டனர் என்றும், அதனால் தான், பொதுமக்கள், நாங்கள் மோடியின் குடும்பம் என்று பேசுவதாகவும் குறிப்பிட்டார்.


Next Story