இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு


இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு
x

கோப்புப்படம்

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் தேசிய நல்லிணக்க திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இன்று (புதன்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துடன் கூடிய சுயேச்சை குழுக்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

அனைத்து கட்சி கூட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள சில எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளன. இன்னும் சில கட்சிகள் தங்களின் முடிவை அறிவிக்கவில்லை.

இதனிடையே நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இந்த கூட்டம் ஒரு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என்று நிரூபிக்கப்பட்டால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வோம் என தெரிவித்துள்ளார்.


Next Story