ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவால் நெடுஞ்சாலை மூடப்பட்டது


ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவால் நெடுஞ்சாலை மூடப்பட்டது
x

ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவால் நெடுஞ்சாலை மூடப்பட்டது. வினோத வானிலை காரணமாக விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் நேற்று இடைவிடாத பனிப்பொழிவு மற்றும் மழை என வினோத வானிலை நிலவியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் உயரமான பகுதிகளில் மிதமானது முதல் மற்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. சமவெளிகளின் பல பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது. நேற்று காலையில் சாரல்போல தூவத் தொடங்கிய பனிப்பொழிவுகள் பகல் முழுவதும் நீடித்த வண்ணம் இருந்தது. குல்மார்க்கின் உயரமான இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தங்கும் விடுதிகளில் பனிப்பொழிவை அதிகமாக அனுபவித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீநகரின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவும், சமவெளிகளில் லேசான மழைப்பொழிவும் காணப்பட்டது. மாறுபட்ட இந்த வானிலையால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் அதனுடன் இணைந்த அனைத்து பகுதிகளின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகரில் இருந்து இயக்கப்படும் விமான சேவையும் ரத்துசெய்யப்பட்டது.

ரம்பன் மாவட்டத்தின் மெகர் பகுதியில் நிலச்சரிவு மற்றும் சாலையின் வழுக்கும் தன்மையால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.


Next Story