அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரயாக்ராஜ்,

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாரா சந்த் விடுதியில் நேற்று மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவரின் உடல் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்த செய்தி பரவியதும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதிக்கு வெளியே திரண்டனர். மேலும் அவர்கள், கட்டண உயர்வே மாணவரின் தற்கொலைக்கு காரணம் என்று கூறினா்.

கட்டண உயர்வு தொடர்பாக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது. கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜய கபூர், தற்கொலை செய்து கொண்ட மாணவர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், விடுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்தார் என்றும் அவரது தற்கொலைக்கும் கட்டண உயர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story