'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்


முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
x

சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை மேற்பார்வைக் குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணை வரும் 20-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கேரள அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், இந்த ஆய்வை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் எனவும் கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த அணை தொடர்பான ஆய்வின் போது தமிழ்நாடு, கேரளா அரசு அதிகாரிகள் உடன் இருக்க வேண்டும் என்றும், ஆய்வு பணிகளை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேரள அரசின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 20-ந்தேதி நடைபெறும் விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டில் பதில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story