ஜூன் 1ந்தேதி முதல் அரியானாவில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
அரியானாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1ந்தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர்,
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 1ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை கோடை விடுமுறை வழங்கப்படுவதாக அரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இந்த காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் ஜூலை 1ந் தேதி மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள், தொகுதிக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொகுதி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story