பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி டெல்லி திரும்பினார்...!


பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி  டெல்லி திரும்பினார்...!
x

பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி இன்று டெல்லி திரும்பினார்.

டெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மராட்டியம், டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் பல்வேறு மாநிலங்களை நேற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைந்தது.

4 ஆயிரம் கிலோ மீட்டரை கடந்த ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நேற்று நிறைவடைந்தது. மொத்தமாக 136 நாட்கள் நடைபெற்ற இந்த பாத யாத்திரை நிறைவடைந்தது.

யாத்திரையின் இறுதி நாளான நேற்று ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றி ராகுல்காந்தி தனது யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்நிலையில், பாரத் ஜோடோ யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல்காந்தி இன்று டெல்லி திரும்பினார். டெல்லியில் தனது வீட்டிற்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவடைந்த நிலையில் ராகுல்காந்தியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story