சமூக ஆர்வலர் கொலையில் தொடர்பு: பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி பணி இடைநீக்கம்


சமூக ஆர்வலர் கொலையில் தொடர்பு: பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சமூக ஆர்வலர் கொலையில் தொடர்புடைய பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு:

சமூக ஆர்வலர் கொலையில் தொடர்புடைய பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அடித்து கொலை

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் தாலுகா குந்திபரா கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா (வயது 30). இவர் சமூக ஆர்வலர் ஆவார். இவர் தனது நண்பர்களுடன் கடந்த வாரம் அந்த பகுதியில் உள்ள மதுகடைக்கு சென்றார். அவர் அங்கு மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பலை அவரை சரமாரியாக தாக்கி, அடித்து கொலை செய்தது.

இதுதொடர்பாக அவரது தந்தை ஜகலூர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் தொடர்புடையதாக அந்த பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமகிருஷ்ணா அந்த பகுதியில் நடைபெறும் மோசடி, ஊழல்கள் குறித்து அவ்வப்போது போராட்டங்கள் நடத்துவதும், அதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்பதுமாக இருந்து வந்துள்ளார்.

கூட்டாளிகளை...

இதுதொடர்பாக இவருக்கும் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக இருந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால், நாகராஜ், கூட்டாளிகளை வைத்து அவரை கொலை செய்தது உறுதியானது. போலீஸ் விசாரணையில், நாகராஜ் தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வளர்ச்சி அதிகாரி நாகராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நாகராஜை மாவட்ட பஞ்சாயத்து செயல்அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.


Next Story