ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 2 போலீசார் பணி இடைநீக்கம்


ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 2 போலீசார் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 29 March 2023 12:15 AM IST (Updated: 29 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பிய 2 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூரு சுப்ரமணியாநகர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரணகவுடா. இதே போலீஸ் நிலையத்தில் சிவக்குமார் மற்றும் விஜய் ஆகியோர் போலீஸ்காரர்களாக உள்ளனர். இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரணகவுடா, விடுதிகள் மற்றும் மதுபான விடுதிகளில் லஞ்சம் பெறுவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகங்களுக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர்.

அதுகுறித்த தகவலின் பேரில் மல்லேசுவரம் துணை போலீஸ் கமிஷனர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் போலீஸ்காரர்கள் அளித்த புகார் கடிதம் முற்றிலும் பொய் எனவும், இன்ஸ்பெக்டர் பணி தொடர்பாக தொல்லை கொடுத்ததால், அவர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து உயர் அதிகாரி மீது பொய் வழக்கு தொடர முயன்ற சிவக்குமார் மற்றும் விஜய் ஆகிய 2 பேரை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story