பா.ஜ.க.வில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி


பா.ஜ.க.வில் இணைந்த பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியின் மனைவி
x
தினத்தந்தி 14 March 2024 4:15 PM IST (Updated: 14 March 2024 4:36 PM IST)
t-max-icont-min-icon

பிரனீத் கவுர் 4 முறை எம்.பி. ஆகவும், ஓரு முறை மத்திய மந்திரியாகவும் இருந்துள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரிந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர். முன்னாள் மத்திய மந்திரியான பிரனீத் கவுர், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியின் காங்கிரஸ் மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பிரனீத் கவுர் இன்று டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பிரனீத் கவுர் 4 முறை எம்.பி. ஆக இருந்துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது கணவரும், பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரியுமான அமரிந்தர் சிங், பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே, காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரனீத் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பா.ஜ.க.வில் இணைந்த பின் பிரனீத் கவுர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் தலைமையில் எனது தொகுதி, எனது மாநிலம் மற்றும் நாட்டிற்காக பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சியில் நன்றாக பணியாற்றினேன். தற்போது பா.ஜ.க. வுடன் இணைந்து மேலும் சிறப்பாக பணியாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாட்டியாலா நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான பிரனீத் கவுர் இதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story