பேஸ்புக் காதல்; உ.பி. இன்ஜினியரை மணந்த ஸ்வீடன் பெண்...!


பேஸ்புக் காதல்; உ.பி. இன்ஜினியரை மணந்த ஸ்வீடன் பெண்...!
x

காதலனை திருமணம் செய்துகொள்ள ஸ்வீடன் பெண் இந்தியா வந்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் இட்டாக் நகரை சேர்ந்த இளைஞர் பவன் குமார். இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பி.டெக் கல்வி பயின்று தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, 2012-ம் ஆண்டு பவன் குமாருக்கு பேஸ்புக் மூலம் ஸ்வீடனை சேர்ந்த கிறிஸ்டீன் லிப்பெட் என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இந்த காலகட்டத்தில் கிறிஸ்டீன் லிப்பெட் தனது காதலனான பவன் குமாரை சந்திக்க 5-க்கும் மேற்பட்ட முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி, கிறிஸ்டீன் லிப்பெட் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஸ்வீடன் இளம்பெண் கிறிஸ்டீன் லிப்பெட்டிற்கு உத்தரபிரதேச இளைஞர் பவன் குமாருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது. உத்தரபிரதேசத்தின் இட்டாக் நகரில் கிறிஸ்டீன் லிப்பெட் தனது காதலன் பவன் குமாரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் பவன் குமாரின் பெற்றோரின் சம்மதத்துடன் நடைபெற்றுள்ளது.

திருமணம் செய்துகொண்ட நிலையில் கணவர் பவன் குமாரை கிறிஸ்டீன் லிப்பெட் தன்னுடன் உடன் விரைவில் ஸ்வீடன் அழைத்து செல்ல உள்ளார்.


Next Story