இந்தியா-ஜப்பான் இடையே 5ஜி தொழில்நுட்பம் குறித்த பேச்சுவார்த்தை - காணொலி மூலம் நடந்தது


இந்தியா-ஜப்பான் இடையே 5ஜி தொழில்நுட்பம் குறித்த பேச்சுவார்த்தை - காணொலி மூலம் நடந்தது
x

5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா-ஜப்பான் இடையிலான ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியா-ஜப்பான் இடையே 4-வது சைபர் துறை பேச்சுவார்த்தை காணொலி மூலம் நடந்தது. மத்திய வெளியுறவு, உள்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக்குழுவினர், ஜப்பான் உயர்மட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மத்திய வெளியறவு அமைச்சகத்தின் சைபர் துறை பிரிவு இணை செயலாளர் முவான்பை சையாவி தலைமையிலான இந்திய குழுவினர், ஜப்பானின் வெளியுறவு அமைச்சக சைபர் கொள்கைத்துறை பொறுப்பு தூதர் யுடாகா அரிமா தலைமையிலான குழுவினருடன் இந்த பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

இதில் முக்கியமாக, 5ஜி தொழில்நுட்பத்தில் ஜப்பானின் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இருதரப்பு சைபர் ஒத்துழைப்பின் முக்கிய துறைகள் குறித்து இரு நாட்டுக்குழுவினரும் விவாதித்தனர். மேலும் 5ஜி தொழில்நுட்பம் உட்பட சைபர் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் அடைந்த முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தனர்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.


Next Story