Normal
"தமிழகம் பிரதமர் மோடியை விரும்புகிறது"... தமிழில் டுவீட் செய்த மத்திய மந்திரி அமித் ஷா

கோப்புப்படம்
தமிழகத்தில் பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் பெருகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தமிழகத்தில் பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் பெருகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடி 31 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்காக வருகை தந்த மோடிக்கு வழிநெடுகிலும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த அமித்ஷா, தமிழகத்தில் பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் பெருகி வருவதாக தமிழில் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் தமிழகம் பிரதமர் மோடியை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story