உலகம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை தெரிந்து கொள்ள சமஸ்கிருதம் கற்பது அவசியம் - வெங்கையா நாயுடு


உலகம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை தெரிந்து கொள்ள சமஸ்கிருதம் கற்பது அவசியம் - வெங்கையா நாயுடு
x

சமஸ்கிருதத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்று துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.

பெங்களூரு,

சமஸ்கிருதத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் தொழில்நுட்பம் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கூறியுள்ளார். பெங்களூருவில் கர்நாடக சமஸ்கிருத பல்கலைகழகத்தின் 9-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது:

பண்டைக்கால கையெழுத்துப் பிரதிகள், ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகளை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும். வேதம் ஓதுவதை பதிவு செய்வதோடு, பண்டைக்கால சமஸ்கிருத நூல்களின் அர்த்தத்தையும் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் புத்தகங்களை வெளியிடுவது தான், சமஸ்கிருத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகும்.

சமஸ்கிருத மொழியை கற்பதற்கு புத்துயிரூட்ட, வெகுஜன இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்தியாவின் மிகவும் பழமையான செம்மொழி இலக்கியம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுக்க அனைத்துத் தரப்பினரும் பாடுபட வேண்டும். இந்தியாவின் ஆன்மாவை உணர்ந்துகொள்ள சமஸ்கிருதம் நமக்கு உதவுகிறது. உலகம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை தெரிந்து கொள்ள ஒருவர் சமஸ்கிருதம் கற்பது அவசியம். நமது நாட்டின் நாகரீக வளத்தை ஆய்வு செய்ய வேண்டுமானால், சமஸ்கிருத மாணவராக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பு விதிமுறைகளாலோ அல்லது அரசு உதவி அல்லது பாதுகாப்பு மூலம் மட்டுமோ, ஒரு மொழியை பாதுகாத்துவிட முடியாது. குடும்பம் குடும்பமாக, சமுதாய அளவில் மற்றும் கல்வி நிறுவனங்களால் தான் அந்த மொழி உயிர்ப்புடன் திகழும். சமஸ்கிருதம் உள்ளிட்ட நமது செம்மொழிகளைப் பாதுகாத்து, அதனை பரவச் செய்வதற்கு, தொழில்நுட்பம் ஏராளமான வாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story