'ஜன் விஸ்வாஸ்' என்ற பெயரில் யாத்திரை தொடங்கிய பீகார் முன்னாள் துணை-முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ்


ஜன் விஸ்வாஸ் என்ற பெயரில் யாத்திரை தொடங்கிய பீகார் முன்னாள் துணை-முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ்
x

11 நாட்கள் நடைபெறும் ஜன் விஸ்வாஸ் யாத்திரையில் 38 மாவட்டங்களில் உள்ள மக்களின் ஆதரவை திரட்ட தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளார்.

பாட்னா,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பீகாரில், முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளமும், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதளமும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்த இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தன. ஆனால், சமீபத்தில் இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததையடுத்து நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி, பா.ஜ.க.வில் மீண்டும் இணைந்தார். இதனால் தேஜஸ்வி யாதவ் மற்றும் நிதிஷ்குமார் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் 'ஜன் விஸ்வாஸ் யாத்திரை' என்ற பெயரில் பீகார் முழுவதும் சுற்றுப்பயணத்தை முசாபர்பூரில் இருந்து இன்று தொடங்கினார். மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக இந்த யாத்திரையை தேஜஸ்வி யாதவ் தொடங்கியுள்ளார்.

11 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை வருகிற 1ம் தேதி அன்று தேஜஸ்வி யாதவ் நிறைவு செய்கிறார். இந்த 11 நாட்கள் யாத்திரையில் 38 மாவட்டங்களில் உள்ள மக்களின் ஆதரவை திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். 32 பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோதிஹாரி நகரை அடைவதற்கு முன், சிதாமர்ஹி மற்றும் ஷியோஹரில் மேலும் இரண்டு பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்ற உள்ளார்.


Next Story