தேர்தல் ஆதாயத்துக்காக சாதிவாரி கணக்கெடுப்பில் தில்லுமுல்லு நடந்ததா? பீகார் துணை முதல்-மந்திரி விளக்கம்


தேர்தல் ஆதாயத்துக்காக சாதிவாரி கணக்கெடுப்பில் தில்லுமுல்லு நடந்ததா? பீகார் துணை முதல்-மந்திரி விளக்கம்
x

சாதிவாரி கணக்கெடுப்பில் தவறுகள் நடைபெறவில்லை என்று பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், யாதவர்கள் 14 சதவீதம் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. ராஷ்டிரீய ஜனதாதளத்தின் தேர்தல் ஆதாயத்துக்காக, யாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காட்டப்பட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியது.

இதற்கு துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான தேஜஸ்வி யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

என்னை பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் சரியாகவே உள்ளன. கடந்த 1931-ம் ஆண்டு கணக்கெடுப்பில், ஒடிசா, ஜார்கண்ட் ஆகியவை பீகாருடன் இணைந்திருந்தன. அப்போதே யாதவர்கள் 11 சதவீதம் இருந்தனர். சுமார் 100 ஆண்டுகள் கழித்து, 14 சதவீதம் இருக்கின்றனர் என்றால் அது இயல்புதானே? தேர்தல் ஆதாயத்துக்காக என்றால், முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் சாதி எண்ணிக்கையும் உயர்த்தி காண்பிக்கப்பட்டிருக்கும் அல்லவா? பா.ஜனதாவுக்கு நம்பிக்கை இல்லை என்றால், மத்திய அரசிடம் சொல்லி, தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தச் சொல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story