தெலுங்கானா: கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை


தெலுங்கானா:  கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை
x

அந்த மாணவியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

ஹனம்கொண்டா,

தெலுங்கானாவில் பீமராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த 17 வயது மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த மாணவி சாஹித்யா என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் விடுதி ஒன்றில் வசித்து வந்துள்ளார். அவருடைய உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு நேற்று அனுப்பப்பட்டது.

இந்த தற்கொலைக்கான சரியான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்றும் கூறினர். இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story