தெலுங்கானாவை சேர்ந்த இளம்பெண் 7 கண்டங்களிலுள்ள 7 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை


தெலுங்கானாவை சேர்ந்த இளம்பெண் 7 கண்டங்களிலுள்ள 7 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை
x

image instagrammed by poorna_malavath

தெலுங்கானாவை சேர்ந்த22 வயது இளம்பெண், 7 கண்டங்களிலுள்ள 7 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணா மாலாவத் என்ற 22 வயது இளம்பெண், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் மிக இளைய பெண் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ளார்.

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை 2014 ஆம் ஆண்டு மே மாதம் தனது 13-வது வயதில் ஏறினார். இந்த நிலையில், தற்போது உலகின் 7 கண்டங்களில் அமைந்துள்ள 7 உயரமான சிகரங்களில் ஏறி சதனை படைத்துள்ளார்.

அவர், எவரெஸ்ட் (ஆசியா), கிளிமஞ்சாரோ மலை (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் மலை (ஐரோப்பா), அகோன்காகுவா (தென் அமெரிக்கா), மவுண்ட் கார்டென்ஸ் பிரமிட் (ஓசியானியா), வின்சன் (அண்டார்டிகா) மலையை மற்றும் மவுண்ட் தெனாலி (வட அமெரிக்கா) ஆகிய சிகரங்களில் ஏறி இந்த சாதனையை படைத்துள்ளார்.

பூர்ணா மாலாவத்தின் இந்த சாதனையை அவரது பயிற்சியாளர் சேகர் பாபு உறுதிப்படித்தினார். பூர்ணா மாலாவத் தற்போது ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பைப் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story