காஷ்மீரில் பயங்கரவாத நிதி உதவி வழக்கு; 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை


காஷ்மீரில் பயங்கரவாத நிதி உதவி வழக்கு; 6 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
x

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்த வழக்கில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று சோதனை நடத்தியது.



புதுடெல்லி,


காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்த வழக்கில் 6 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இன்று சோதனை நடத்தியது.

காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்த வழக்கில் பாராமுல்லா, புத்காம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களின் 6 பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சார்பில் (என்.ஐ.ஏ.) இன்று சோதனை நடந்தது.

இதில் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு ஆவணங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன என முகமை தெரிவித்து உள்ளது.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நன்கொடை என்ற பெயரில், தொண்டு மற்றும் நலன் சார்ந்த பிற நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டி, அவற்றை வன்முறை மற்றும் பிரிவினைவாத செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிதியானது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளான ஹிஜ்புல் முஜாகிதீன், லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் வழியே பிறருக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்து உள்ளது.

காஷ்மீரில் இளைஞர்களை ஊக்கப்படுத்தி, பிரிவினைவாத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ள ஏதுவாக அவர்களை புதிய உறுப்பினர்களாக பயங்கரவாத இயக்கத்தில் ஆள்சேர்ப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பு ஈடுபட்டு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story