பயங்கரவாதிகள் விதிகளை பின்பற்றுவது இல்லை;பதிலடியும் அப்படித்தான் இருக்கும்; ஜெய்சங்கர்


பயங்கரவாதிகள் விதிகளை பின்பற்றுவது இல்லை;பதிலடியும் அப்படித்தான் இருக்கும்; ஜெய்சங்கர்
x
தினத்தந்தி 13 April 2024 5:01 AM GMT (Updated: 13 April 2024 5:41 AM GMT)

எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார். அப்போது, இந்தியா நல்லுறவை பேணுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் நாடுகள் எவை என்று இளைஞர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர் கூறியதாவது:- பாகிஸ்தான் என்ற நாடுதான். 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் காஷ்மீருக்குள் ஊடுருவியது. இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அப்போது மாநிலமும் இணைக்கப்பட்டது.இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருந்த போது, அதை நாம் நிறுத்திவிட்டு ஐக்கிய நாடுகள் அவைக்கு சென்றோம். பயங்கரவாதம் என்று சொல்வதற்கு பதிலாக பழங்குடியின ஊடுருவல்காரர்கள் என்று நாம் குறிப்பிட்டோம்.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது என்று துவக்கத்தில் இருந்தே தெளிவாக இருந்து இருந்தால்.. நமது வெளியுறவுக்கொள்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். பயங்கரவாதத்தை எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியுறவுக் கொள்கை தற்போது 50 சதவீதம் மாறியுள்ளது. எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது என்று பயங்கரவாதிகள் நினைக்கக் கூடாது. பயங்கரவாதிகள் எந்த விதிகளின் படியும் செயல்படுவது இல்லை. எனவே பயங்கரவாதிகளுக்கான பதிலடியும் விதிகளின்படி இருக்காது" என்றார்.


Next Story