மராட்டியத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.!


மராட்டியத்தில் நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு.!
x
தினத்தந்தி 20 July 2023 2:15 PM IST (Updated: 20 July 2023 2:38 PM IST)
t-max-icont-min-icon

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்து உள்ளது.

மும்பை,

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதிகனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்கள் உள்ளன.

இதனால் நிலச்சரிவில் சுமார் 30 குடும்பங்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காலை நிலவரப்படி நிலச்சரிவில் இருந்து 25 பேர்மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 21 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இரண்டு தேசிய பேரிடர் மீட்புக்குழு படைகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளது. இவர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 10 ஆக அதிகரித்து உள்ளது.

1 More update

Next Story