ஓமனில் தவிக்கும் மீனவர்களை மீட்கவேண்டும்- மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் 8 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் 8 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
4 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி தொழிலுக்காக ஓமன் சென்ற குமரி மீனவர்கள் 8 பேருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் நாடு திரும்ப வேண்டுமானால் அவர்கள் தலா ரூ.1.1 லட்சம் வழங்க கூறி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளதாகவும் அண்ணாமலை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
Related Tags :
Next Story