சிறுமியை முதலை இழுத்துச்சென்றதால் பரபரப்பு.!


சிறுமியை முதலை இழுத்துச்சென்றதால் பரபரப்பு.!
x

கோப்புப்படம் 

கால்களை கழுவ கால்வாய்க்குள் இறங்கிய சிறுமியை திடீரென முதலை இழுத்துச்சென்றது.

லக்னோ

உத்தரபிரதேசம் லக்கிம்பூர் மாவட்டம் துல்ஹிபூர் கிராமத்தில் உள்ளது சாரதா கால்வாய். இந்த கால்வாயில் முதலைகள் அதிகம் காணப்படும். அதே கிராமத்தை சேர்ந்த சிறுமி காமினி(வயது 18) தனது கால்களை கழுவ கால்வாய்க்குள் இறங்கி உள்ளார். அப்போது ஒரு முதலை காமினியை கவ்வி தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர், போலீசார் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால்வாயில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாகியும் சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story