இங்கிலாந்தில் இந்திய உணவகத்துக்கு உயரிய விருது


இங்கிலாந்தில் இந்திய உணவகத்துக்கு உயரிய விருது
x

இங்கிலாந்தில் ‘சட்னி மேரி’ என்ற இந்திய உணவகத்துக்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் சிறப்பாக செயல்படும் உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், மசாஜ் சென்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு 'ஏஏ விருந்தோம்பல் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. தனியார் அமைப்பால் வழங்கப்படும் இந்த விருது அந்த நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் 'சட்னி மேரி' என்ற இந்திய உணவகம் இந்த ஆண்டின் சிறந்த உணவகம் என்ற விருதை பெற்றது. 33 ஆண்டுகள் பழமையான இந்த இந்திய உணவகம் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல பிரபலங்களின் விருப்பமான உணவகமாக அறியப்படுகிறது.


Next Story