ஸ்கூட்டரை வெயிலில் நிறுத்தி தோசை சுட்ட நபர்


ஸ்கூட்டரை வெயிலில் நிறுத்தி தோசை சுட்ட நபர்
x

தெலுங்கானாவில் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில் ஸ்கூட்டரை வெயிலில் நிறுத்தி அதில் ஒருவர் தோசை சுட்டுள்ளார்.



ஐதராபாத்,



நாடு முழுவதும் கோடை காலத்தில் வெப்பம் தொடர்ந்து அதன் கோர முகம் காட்டி வருகிறது. இதில், தெலுங்கானாவில் ஒருவர் தன்னுடைய வெஸ்பா ஸ்கூட்டரை வெயிலில் நிறுத்தி வைத்து, அதன் சீட்டில் தோசை சுட்டு உள்ளார். அதனை வெஸ்பா தோசை என்றும் பெயரிட்டு உள்ளார்.

முதலில் தோசைமாவை சீட்டில் ஊற்றி விட்டு, அதனை வட்டவடிவில் பரப்பி விடுகிறார். சற்று வெந்தவுடன் அதனை திருப்பி போடுகிறார். இதில் லேசாக பழுப்பு நிறத்தில் தோசை வெந்து காணப்படுகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டு உள்ளார். அதில், கோடை காலத்தில் 40 டிகிரி வெப்பநிலையில், வெஸ்பா தோசையை தொழில்முறை சமையல் நிபுணர்கள் சுட்டு உள்ளனர் என தலைப்பிட்டு உள்ளார்.

வீடியோவை 3.94 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறார்கள். நெட்டிசன்கள் பலரும் விமர்சனங்களை பதிவிட்டு உள்ளனர். அதில், ஒருவர் இது நான் ஸ்டிக் தோசா என குறிப்பிட்டு உள்ளார். வீடியோவுக்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


Next Story