ஜனநாயகத்தை சிதைக்க காங்கிரஸ் திட்டமிட்டது- பிரதமர் மோடி


ஜனநாயகத்தை சிதைக்க காங்கிரஸ் திட்டமிட்டது- பிரதமர் மோடி
x

காங்கிரஸ் கட்சி எப்போதுமே வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறது என்று பிரதமர் மோடி பேசினார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கர்நாடகா மாநிலத்தில் இன்று 4 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். பெலகாவி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜனநாயகத்தை சிதைக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. முகலாய பேரரசர் அவுரங்கசிப்பை பாராட்டுபவர்களுடன் அந்தக் கட்சி கூட்டணியில் இருந்தது. மக்களின் பணத்தை எடுத்து அதனை தங்களின் வாக்கு வங்கியினருக்கு மறு விநியோகம் செய்ய, காங்கிரஸ் ஆட்சி அமைக்க விரும்புகிறது.

காங்கிரஸ் கட்சி எப்போதுமே வாக்கு வங்கி குறித்து மட்டுமே கவலைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி தேசிய நலன் என்பதை தாண்டி ஒரு குடும்பத்தின் நலன் என்ற குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது" என்றார்.

1 More update

Next Story