கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


கேரள கவர்னருக்கு எதிராக அம்மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x

8 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

திருவனந்தபுரம்,

மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் சமீபத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து கேரள அரசும், அம்மாநில கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள 8 மசோதாக்களுக்கு கவர்னர் ஆரிப் முகமது கான் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 3 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக கவர்னர் மீது கேரள அரசு புகார் தெரிவித்துள்ளது.


Next Story