"தமிழ்நாடு அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.." -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!


தமிழ்நாடு அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது.. -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!
x

ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி,

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை இன்று அறிவித்தனர்.

அதில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும். என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுடெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

தமிழக அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகளும் ஒருமித்த கருத்துடன் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பால் அனைத்து மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது முதல் அமைச்சரின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின்படி,போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழக அரசு போட்டிகளை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story