விபத்துக்குள்ளான ரெயில்களின் பெட்டிகள், கிரேன் உதவியுடன் அகற்றும் பணிகள் விறுவிறுப்பு


விபத்துக்குள்ளான ரெயில்களின் பெட்டிகள், கிரேன் உதவியுடன் அகற்றும் பணிகள் விறுவிறுப்பு
x

ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரெயில்களின் பெட்டிகள், கிரேன் உதவியுடன் அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே விபத்துக்குள்ளான ரெயில்களின் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தண்டவாளம் மற்றும் அதன் அருகில் சாய்ந்தும், சேதமடைந்தும் கிடக்கும் ரெயில் பெட்டிகளை கிரேன்களின் உதவியுடன் அகற்றும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.


Next Story