நகைக்கடையில் திருடிய வாலிபர் பிடிபட்டார்


நகைக்கடையில் திருடிய வாலிபர் பிடிபட்டார்
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நகைக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் பிடித்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திருட்டில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஹெக்கனஹள்ளியை சேர்ந்த ரமேஷ் என்பதும், அவர் மாகடி ரோட்டில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து, அங்கிருந்து தங்க நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது. மேலும், அவர் இதேபோல் பல்வேறு இடங்களில் நகைகளை திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நகைகளை போலீசார் மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story