நகைக்கடையில் திருடிய தமிழக பெண்கள் 2 பேர் கைது
நகைக்கடையில் திருடிய தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பனசங்கரி:
பெங்களூரு பனசங்கரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்கு 2 பெண்கள் நகை வாங்க வந்தனர். அவர்கள் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி, தங்க நகைகளை திருடினர். மேலும் அவர்கள் அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த நகைக்கடை ஊழியர்கள் பனசங்கரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மேலும் அவர்கள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அதுதொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த 2 பெண்களை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ரத்னா மற்றும் கிருஷ்ணவேணி என்பதும், அவர்கள் தான் நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவர்கள் ஏற்கனவே பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டில் ஈடுபட்டதும், அதுதொடர்பாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதும் தெரிந்தது. அந்த பெண்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.