தீபாவளியையொட்டி பெங்களூருவில் மின்தடை ஏற்படாது; பெஸ்காம் தகவல்


தீபாவளியையொட்டி பெங்களூருவில் மின்தடை ஏற்படாது; பெஸ்காம் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:15 AM IST (Updated: 23 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி பெங்களூருவில் மின்தடை ஏற்படாது என்று பெஸ்காம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூருவில் மின்தடை ஏற்படாது என பெங்களூரு மின்வாரியம் (பெஸ்காம்) சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பெஸ்காம் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெஸ்காம் நிறுவனம் சார்பில் மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில், தீபாவளி பண்டிகையையொட்டி மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெஸ்காம் சார்பில் பண்டிகை காலத்தில் பராமரிப்பு பணிகள் நடத்தப்படாது. இதனால் மின்தடை ஏற்படாமலும், முழுநேர மின் வசதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மின் பிரச்சினைகள் ஏற்படும் பகுதிகளில் அதிகாரிகள் உடனடியாக சென்று அவற்றை சரி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story