10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது - பிரதமர் மோடி


10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருக்கிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 4 Feb 2024 9:59 AM GMT (Updated: 4 Feb 2024 10:08 AM GMT)

நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ரூ.11,600 கோடியிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மூலம் தெற்கு ஆசிய நாடுகளுடனான இணைப்பு பலம் பெறும். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் நிலைமை மாறியிருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. எந்த நாடும் தனது கடந்த காலத்தை அழித்து மறைப்பதன் மூலம் வளர்ச்சி அடைய முடியாது. நமது புனித தலங்களின் முக்கியத்துவத்தை முந்தைய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளத்தவறி விட்டனர்.

பா.ஜ.க.அரசு பதவியேற்கும் முன்னர், அசாமில் 6 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. தற்போது, 12 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சைக்கான மையமாக அசாம் மாறி உள்ளது.10 ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவிற்கு சுற்றுலா பயணிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளனர்.

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்ற உறுதி ஏற்று உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் ஆயுதப்படை சட்டம் திரும்ப பெறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story