40 ஆண்டுகால சேவை: இந்திய கடற்படையின் 3 போர் கப்பல்கள் பணியில் இருந்து ஓய்வு...!


40 ஆண்டுகால சேவை: இந்திய கடற்படையின் 3 போர் கப்பல்கள் பணியில் இருந்து ஓய்வு...!
x

1977ம் ஆண்டு இலங்கையை தாக்கிய புயல், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது நிவாரண, மீட்பு நடவடிக்கைகளில் இந்த போர் கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன.

போர்ட் பிளேர்,

இந்திய கடற்படையில் சீட்டா, குல்தர், கும்பீர் ஆகிய 3 போர் கப்பல்கள் சேவையாற்றி வந்தன. போலந்தில் உள்ள கப்பல்கட்டும் தலத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல்கள் முறையே 1984 ,1985 மற்றும் 1986ம் ஆண்டுகளில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.

இதில், சீட்டா போர் கப்பல் கொச்சி மற்றும் சென்னை கடற்படை தலங்களில் பணியாற்றியது. குல்தர், கும்பீர் ஆகிய போர் கப்பல்கள் விசாகப்பட்டினம் கடற்படை தலத்தில் பணியாற்றின. இதன் பின்னர் இந்த 3 போர் கப்பல்களும் அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கடற்படை தலத்தில் பணியாற்றி வந்தன.

இந்த போர் கப்பல்கள் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 300 நாட்கள் பணியில் இருந்து சுமார் 17 லட்சம் நாட்டிகல் மைல் பயணித்துள்ளன. குறிப்பாக, 1977ம் ஆண்டு இலங்கையை தாக்கிய புயல், 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது நிவாரண, மீட்பு நடவடிக்கைகளில் இந்த போர் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சுமார் 40 ஆண்டுகால சேவைக்கு பின் சீட்டா, குல்தர், கும்பீர் ஆகிய 3 போர் கப்பல்களும் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளன. இதற்கான பிரிவு உபசார நிகழ்ச்சி அந்தமான் நிகோபார் தீவில் நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரிகள், வீரர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story