மத்திய மந்திரி சுரேஷ் கோபி பெயரில் ஆபாச வீடியோ பதிவு - கல்லூரி மாணவர் கைது

கோப்புப்படம்
மத்திய மந்திரி சுரேஷ் கோபி வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சூர்,
மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை மந்திரியாக இருப்பவர் நடிகர் சுரேஷ் கோபி. இவரது பெயரில் ஆபாச பேச்சுடன் கூடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து திருச்சூர் மாவட்ட பா.ஜனதா பொதுச்செயலாளர் ஹரி, பீச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் காட்டூர் அருகே கீழுப்பள்ளிக்கரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஷியாம் (வயது 23) என்பவர் மத்திய மந்திரி பெயரில் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. சமீபத்தில் மத்திய மந்திரி சுரேஷ் கோபி பீச்சி பகுதிக்கு வந்த போது அவரும், ஹரியும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்த வீடியோவை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் ஷியாமை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






