திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு


திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு
x

ஏப்ரல் மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் திருப்பதி முன்பதிவு செய்யப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்காக டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"திருப்பதி ஏழுமலையானை பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வகையில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையானை ரூ.300 டிக்கெட்டில் சென்று சுலபமாக தரிசிக்க ஏப்ரல் மாதத்துக்கான ஆன்லைன் ஓதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் திங்கட்கிழமை(இன்று) காலை 11 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story