நாடுகளிடையேயான நம்பிக்கை பற்றாக்குறையை போர்கள் மேலும் ஆழப்படுத்துகிறது - பிரதமர் மோடி


நாடுகளிடையேயான நம்பிக்கை பற்றாக்குறையை போர்கள் மேலும் ஆழப்படுத்துகிறது - பிரதமர் மோடி
x

உலக நாடுகளிடையேயான நம்பிக்கை பற்றாக்குறையை போர்கள் மேலும் ஆழப்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறினார்.

டெல்லி,

ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது. டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றி ஜி20 உச்சிமாநாட்டை தொடங்கி வைத்தார்.

துவக்க உரையில் பிரதமர் மோடி கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து நம்பிக்கை பற்றாக்குறையை போன்ற பிரச்சினைகளை உலகம் எதிர்கொண்டுள்ளது. இந்த பிரச்சினைகளை போர்கள் மேலும் ஆழப்படுத்துகிறது. கொரோனாவை நம்மால் வெல்லமுடியும் என்றால் போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல முடியும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகின் நன்மைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்கும் காலம் வந்துவிட்டது.

இந்த காலத்தில் தான் பழைய பிரச்சினைகள் நம்மிடமிருந்து புதிய தீர்வுகளை எதிர்பார்க்கின்றன. அதனால்தான் மனிதத்தை மையப்படுத்திய அணுகுமுறையுடன் நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும்' என்றார்.


Next Story