திருப்பதி: ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 24-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு


திருப்பதி: ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 24-ந்தேதி வெளியீடு - தேவஸ்தானம் அறிவிப்பு
x

ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

திருப்பதி,`

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இதில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Next Story