மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி


மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 14 March 2024 8:55 PM IST (Updated: 14 March 2024 9:58 PM IST)
t-max-icont-min-icon

தலைவர் மம்தா பானர்ஜிக்காக பிரார்த்தியுங்கள் என தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொல்கத்தா,

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியின் நெற்றியில் ரத்தம் வழிகிற படங்கள், அக்கட்சியின் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் "நமது தலைவர் மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்காக பிரார்த்தியுங்கள்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதனால் இதுபோன்ற அசாம்பாவிதம் ஏற்பட்டது என்பது குறித்து விவரம் ஏதும் வெளியிடவில்லை.

நெற்றியில் ரத்தம் வழிந்தநிலையில் மம்தாபானர்ஜியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது மேற்கு வங்காளத்தில் அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story