இன்று பில்கிஸ் பானு... நாளை நீங்களோ, நானாக இருக்கலாம்... - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி


இன்று பில்கிஸ் பானு... நாளை நீங்களோ, நானாக இருக்கலாம்... - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
x

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை செய்யப்பட்டனர்.

டெல்லி,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த கர்பிணியான பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றார்.

அப்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும், அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேஎம் ஜோசப், நாகர்த்னா அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வந்தது.

கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது எந்த அடிப்படையில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தீர்கள்? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள் என்று குஜராத் அரசு மற்றும் மத்திய அரசுக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பில்கிஸ் பானு குற்றவாளிகளை முன்கூட்டிய விடுதலை செய்ததற்கான ஆவணங்களை குஜராத் அரசு, மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ஒரு கர்ப்பிணி பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சிலர் கொல்லபட்டுள்ளனர். இந்த வழக்கையும் பிற வழக்கையும் நீங்கள் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிட முடியாதது போல படுகொலையை ஒற்றை கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றவாளிகள் சமூகம் மற்றும் சமுதாயத்திற்கு எதிராக குற்றம் செய்துள்ளனர். சமனில்லாதவர்கள் சமமானவர்கள் போன்று நடத்தப்படக்கூடாது.

குற்றவாளிகளை விடுதலை செய்யும் மாநில முடிவு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பது தான் கேள்வி. இன்று பில்கிஸ் பானு நாளை யாராகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம் நானாகவும் இருக்கலாம்.

குற்றவாளிகளை எதன் அடிப்படையில் விடுதலை செய்தீர்கள் என்ற ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்றால் நாங்கள் சொந்தமாக முடிவுக்கு வருவோம்' என்றார். பின்னர் இந்த வழக்கை மே 2-ம் தேதிக்கு கோர்ட்டு ஒத்தி வைத்தது.


Next Story