7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!


7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணிக்கை...!
x

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

புதுடெல்லி,

கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது. அன்று காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன. இதனால் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story