இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக இன்றைய இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்: ஓம் பிர்லா பேச்சு


இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக இன்றைய இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்:  ஓம் பிர்லா பேச்சு
x

ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்தும் பெரும் பொறுப்புணர்வு இளைஞர்களுக்கு உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசியுள்ளார்.


ஜோத்பூர்,



ராஜஸ்தானின் ஜோத்பூர் நகரில் நடந்த 2022-ம் ஆண்டுக்கான தேசிய இளையோர் மாநாட்டில், நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, இந்தியாவில் வாழ்க்கையின் பாதையாக ஜனநாயகம் உள்ளது.

அடுத்த 25 ஆண்டுகள் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைய போகிறது. இந்தியாவின் 100-வது சுதந்திர தின கொண்டாட்ட தருணத்தில் இந்தியாவை வளர்ச்சியடைந்த ஒரு நாடாக உருவாக்குவதற்கு, இந்தியாவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் இன்றைய இளைஞர்கள் ஒரு பெரும் பங்காற்ற வேண்டும் என பேசியுள்ளார்.

வருங்கால தேசத்தின் கட்டமைப்பாளர்களாக உள்ள இளைஞர்கள் சட்ட தொகுதிகளின் நடைமுறைகளை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். உலகை சரியான திசையில் எடுத்து செல்வதுடன், மனித உரிமைகள், சமூக சேவை, அரசியல் மற்றும் பேரிடர் மேலாண்மையில் பொதுமக்களை பாதுகாப்பதும் இளைஞர்களின் பொறுப்பு மற்றும் கடமையாக உள்ளது என அவர் பேசியுள்ளார்.

அரசாங்கங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க மட்டுமே முடியும். ஆனால், தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்தி, இந்த முடிவுகளை அமல்படுத்துவதில் முக்கிய பொறுப்பு இளைஞர்களையே சார்ந்து உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.


Next Story