வீடுதோறும் மூவர்ண கொடி; தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றிய உள்துறை மந்திரி அமித்ஷா


வீடுதோறும் மூவர்ண கொடி; தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றிய உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 13 Aug 2022 3:32 AM GMT (Updated: 2022-08-13T10:10:08+05:30)

வீடுதோறும் மூவர்ண கொடி பிரசாரத்தின் ஒரு பகுதியாக உள்துறை மந்திரி தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. இதனை தொடர்ந்து டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரோந்து பணியிலும் ஈடுபட்டு உள்ளனர்.

சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹர்கர் திரங்கா என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி, இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் தேசிய கொடியை ஏற்றும்படி கேட்டு கொண்டுள்ளது.

இதனை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தனது வீட்டின் மேல்தளத்திற்கு சென்று, நாட்டின் மூவர்ண கொடியை உயர ஏற்றியுள்ளார். அவரது மனைவி சோனல்ஷாவும் உடன் இருந்து கொடியேற்றினார்.


Next Story