மராட்டிய காங்கிரஸ் தலைவர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து - கொலை முயற்சி என குற்றச்சாட்டு


மராட்டிய காங்கிரஸ் தலைவர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து - கொலை முயற்சி என குற்றச்சாட்டு
x

Image Courtesy : PTI

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே, நேற்று இரவு பந்தாரா மாவட்டத்தில் உள்ள கர்தா கிராமம் அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் மீது ஒரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நானா பட்டோலே அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதனிடையே, இந்த விபத்து சம்பவம் கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அதுல் லாண்டே தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு மோசமான சம்பவம். இது கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை முடித்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. விரும்புகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story